வலான வனப் பகுதியில் துப்பாக்கிகள், ரவைகள் மீட்பு 

வலான வனப் பகுதியில் துப்பாக்கிகள், ரவைகள் மீட்பு 

by Staff Writer 20-08-2021 | 9:21 AM
Colombo (News 1st) வெலிகம - வலான வனப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்றிரவு (19) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 5 துப்பாக்கிகள், 8 மெகசின்கள் மற்றும் 10 ரவைகள் ஆகியன பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த ஆயுதங்கள், தென் பகுதியிலுள்ள பாதாள குழுவினருக்கு உரித்தானதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.