மேலும் சில நகரங்களில் வர்த்தக நிலையங்கள் சுயமாக மூடப்பட்டன

மேலும் சில நகரங்களில் வர்த்தக நிலையங்கள் சுயமாக மூடப்பட்டன

மேலும் சில நகரங்களில் வர்த்தக நிலையங்கள் சுயமாக மூடப்பட்டன

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2021 | 1:15 pm

Colombo (News 1st) நாட்டில் நிலவும் கொரோனா தொற்று காரணமாக சுயமாக நகரங்களை மூடும் நடவடிக்ககை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இன்றும் நாட்டின் சில நகரங்கள் சுயமாக முடங்கின.

அதனடிப்படையில், வெலிமடை நகரின் வர்த்தக நிலையங்களை ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதேத்தில் அத்தியாவசிய போக்குவரத்து சேவை தவிர்த்து ஏனைய போக்குவரத்து சேவைகள் இரத்து செய்யப்படுகின்றதாக வெலிமடை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டிலான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

பதுளை – கெப்பிட்டிபொல வர்த்தக சங்கத்தின் தீர்மானத்துக்கு அமைய ஒரு வார காலத்துக்கு கெப்பிட்டிபொல நகர வர்த்தக நிலையங்கன் மூடப்பட்டுள்ளன.

ஆனாலும், பொருளாதார மத்திய நிலையம் வழமை போல இயங்கும் எனவும் வியாபாரிகளுக்கு வருகை தர முடியும் எனவும் கெப்பிட்டிப்பொல வர்த்தக சங்கத்தின் தலைவர் மனோஜ் பிரசங்க பெரேரா தெரிவித்துள்ளார்.

வர்த்தக சங்கத்தின் தீர்மானத்துக்கு அமைய மாத்தறை – ஊருபொக்க நகர வியாபா நிலையங்களும் இன்று (20) முதல் 10 நாட்குளுக்கு மூடப்பட்டுள்ளன.

மெதிரிகிரிய நகரமும் இன்று முதல் 10 நாட்களுக்கு மூடப்பட்டுள்ள நிலையில், மஹியங்கனை நகர வியாபா நிலையங்களும் எதிர்வரும் ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ளன.

ஹிக்கடுவை நகரின் வியாபார நிலையங்களும் ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ளன

ஹம்பாந்தொட்டை நகரின் வியாபார நிலையங்களை மூடுவதற்கு வியாபாரிகள் தீர்மானித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்