பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி அடுத்த மாத இறுதியில்...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி அடுத்த மாத இறுதியில் வௌியாகும் - UGC 

by Staff Writer 20-08-2021 | 9:59 AM
Colombo (News 1st) கடந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை அடுத்த மாத இறுதிக்குள் வௌியிடவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக உப தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சந்தன உடவத்த குறிப்பிட்டுள்ளார். நிலவும் கொரோனா தொற்று நிலைமையிலும், குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை ஈடுபடுத்தி, வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். இம்முறை ஒரு இலட்சத்து 10 ஆயிரம் விண்ணப்பங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக ஆணைக்குழுவின் உப தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.