தேசிய கிரிக்கெட் ஒப்பந்தத்தில் 18 வீரர்கள் கைச்சாத்து

தேசிய கிரிக்கெட் ஒப்பந்தத்தில் 18 வீரர்கள் கைச்சாத்து

தேசிய கிரிக்கெட் ஒப்பந்தத்தில் 18 வீரர்கள் கைச்சாத்து

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2021 | 6:45 pm

Colombo (News 1st) 18 வீரர்கள், 05 மாத காலத்திற்கு தேசிய கிரிக்கெட் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்குமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏஞ்சலோ மெத்தியூவ்ஸ், தற்போது போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்க, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் உள்வாங்கப்படவில்லை.

தனஞ்சய டி சில்வா, குசல் பெரேரா, திமுத் கருணாரத்ன, சுரங்க லக்மால், தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க, லசித் எம்புல்தெனிய, பெத்தும் நிஷ்ஷங்க, லஹிரு திரிமான்ன, துஷ்மந்த சமீர, தினேஷ் சந்திமால், லக்‌ஷான் சந்தகென், விஷ்வ பெர்னாண்டோ, ஓஷத பெர்னாண்டோ, ரமேஷ் மெண்டிஸ், லஹிரு குமார, அஷேன் பண்டார மற்றும் அகில தனஞ்சய ஆகிய வீரர்கள் இந்த ஒப்பந்தத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்