இன்று (20) முதல் 30 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்: அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த தடையும் இல்லை – இராணுவத் தளபதி

இன்று (20) முதல் 30 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்: அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த தடையும் இல்லை – இராணுவத் தளபதி

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2021 | 3:03 pm

Colombo (News 1st) இன்று (20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த காலப் பகுதியில் அனைத்துவிதமான அத்தியாவசிய சேவைகள், மருந்து தயாரிப்பு மற்றும் விநியோகம், விவசாயம், ஆடைக் கைத்தொழில் ஆகியவற்றை எவ்வித இடையூறுமின்றி முன்னெடுக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத்தவிர, 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கான வேலைத்திட்டம் சுகாதாரத் துறையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்