by Staff Writer 19-08-2021 | 9:03 AM
Colombo (News 1st) ரஷ்யாவின் தயாரிப்பான Sputnik தடுப்பூசியின் ஒரு டோஸ் (Dose) மூலம் மிகவும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் கலாநிதி சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார்.
Sputnik தடுப்பூசியின் ஒரு டோஸை மாத்திரம் பெற்றுக் கொண்டவர்களிடம் மேற்கொண்ட ஆய்வின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.