360 ரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா

360 ரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா

360 ரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2021 | 9:22 am

Colombo (News 1st) இன்றைய தினமும் (19) மாகாணங்களுக்குள் 82 ரயில் சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ரயில்வே திணைக்களத்தில் இதுவரையில் 360 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

தொற்றினால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள காரணத்தினால் சுமார் 10 ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்வாறு மூடப்பட்ட ரயில் நிலையங்களில் கரையோர மார்க்கத்திலான 5 ரயில் நிலையங்களும் அடங்குகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்