பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானம்

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானம்

by Staff Writer 19-08-2021 | 1:18 PM
Colombo (News 1st) எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில், ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவாலும் ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை 10 ரூபாவாலும் கேக் ஒரு கிலோகிராமின் விலையை 100 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.