மேல் மாகாண கொரோனா நோயாளர்களுக்கு புதிய முறைமையின் கீழ் சிகிச்சை

மேல் மாகாண கொரோனா நோயாளர்களுக்கு புதிய முறைமையின் கீழ் சிகிச்சை

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

19 Aug, 2021 | 10:00 am

Colombo (News 1st) மேல் மாகாணத்தில், கொரோனா நோயாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கு உட்படுத்தல் அல்லது வீட்டில் வைத்து சிகிச்சையளிப்பதற்காக இன்று (19) முதல் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளன.

புதிய முறைமைகளின் கீழ் தொலைபேசியினூடாக தகவல்களை வழங்குதல் குறுந்தகவல் (SMS) ஊடாக அறிகுறிகள் குறித்து அறிவிக்க முடியும்.

இதற்காக 1904 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

⭕ நோய் தாக்கம் அதிகரித்திருப்பின் அந்த நோயாளர்கள் A இடைவௌி (Space) வயது இடைவௌி தேசிய அடையாள அட்டை இலக்கம் இடைவௌி விலாசம் என்பவற்றை குறிப்பிட்டு குறித்த இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்ப முடியும்.

⭕ காய்ச்சல் மாத்திரம் ஏற்பட்டிருப்பின் அந்த நோயாளர்கள் B இடைவௌி வயது இடைவௌி தேசிய அடையாள அட்டை இலக்கம் இடைவௌி விலாசம் என்பவற்றை குறிப்பிட்டு 1904 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்ப முடியும்.

⭕ எவ்வித நோய் அறிகுறிகளும் தென்படாத நோயாளர்கள் C இடைவௌி வயது இடைவௌி தேசிய அடையாள அட்டை இலக்கம் இடைவௌி விலாசம் என்பவற்றை குறிப்பிட்டு 1904 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்ப முடியும்.

இவ்வாறு கிடைக்கப்பெறும் குறுந்தகவல்கள் கொவிட் ஒழிப்பு தேசிய மத்திய நிலையத்தின் ஊடாக வைத்திய குழுக்களுக்கு அறிவிக்கப்படும்.

நோயாளர்கள் வழங்கும் தகவலுக்கு அமைய 247 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக அவர்களைத் தொடர்புகொண்டு சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக அம்பியூலன்ஸ் சேவை உள்ளிமட்ட ஏனைய சிகிச்சை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனைத் தவிர வீட்டில் தனிமைப்படுத்தப்படும் கொரோனா நோயாளர்களை வைத்திய குழுவினர் தொடர்ச்சியாக தொடர்புகொண்டு தேவையான சிகிச்சைகள் வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 1390 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்