புதிய சுகாதார வழிகாட்டல் கோவை வௌியீடு

புதிய சுகாதார வழிகாட்டல் கோவை வௌியீடு

by Staff Writer 18-08-2021 | 5:46 PM
Colombo (News 1st) சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய கோவை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் நிகழ்வுகள் தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளன. அதற்கமைய,

⭕

 வீட்டிலிருந்து வௌியேறுவதற்கு ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுவதுடன், தொழில் நிமித்தம் அல்லது சுகாதார தேவைகளுக்காக மாத்திரமே வெளியில் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

⭕

 அத்தியாவசிய தேவைகளுக்காக ஒவ்வொரு மாகாணத்திற்குள்ளும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில், ஆசன எண்ணிக்கைக்கு அமைய பஸ் மற்றும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சுகாதார வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

⭕

 தனியார் மற்றும் வாடகை வாகன சேவைகள், அந்தந்த பகுதிகளுக்குள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன், கார் மற்றும் முச்சக்கரவண்டிகளில் ஆசன எண்ணிக்கைக்கு அதிகரிக்காத வகையில் சேவைகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டடுள்ளது.

⭕

 ஆசன எண்ணிக்கைக்கு அமையவே ஏனைய வாகனங்களும் சேவையில் ஈடுபட வேண்டும் என சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள புதிய வழிகாட்டல் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

⭕

  ஆடை விற்பனை நிலையங்களில் கடுமையான சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

⭕

  விவசாய நடவடிக்கைககளின் போது சமூக இடைவௌியுடன், முகக்கவசம் அணிந்து, சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

⭕

  சில்லறை வர்த்தக நிலையங்களில் ஒரே தடவையில், அதிகபட்சமாக 10 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படுகின்றது.

⭕

  திறந்த வர்த்தக நிலையங்கள் மற்றும் வாராந்த சந்தைகளில், அதன் இடவசதிகளின் அடிப்படையில் 25 வீதத்தினரையே ஒரே நேரத்தில் அனுமதிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

⭕

  பேக்கரி, சிகையலங்கார நிலையங்கள், மின் உபகரண விற்பனை நிலையங்கள், கட்டட நிர்மாண பொருட்கள், தளபாட விற்பனை நிலையங்கள், புகைப்படங்களை எடுக்கும் நிலையங்களிலும் 25 வீதமானோருக்கே அனுமதி வழங்கப்படுகின்றது.

⭕

  முன்பள்ளிகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன. உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய புதிய சுகாதார வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்டுள்ளது.