சுய முடக்கத்திற்கு செல்லுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

சுய முடக்கத்திற்கு செல்லுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

சுய முடக்கத்திற்கு செல்லுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2021 | 1:41 pm

Colombo (News 1st) நாட்டின் தற்போதைய தீர்மானமிக்க நிலைமைக்கு மத்தியில், வைத்திய ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகளுக்கு அமைவாக சுய முடக்கத்திற்கு செல்லும்படி ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகள், மக்களை கோரியுள்ளன.

நாடு உடனடியாக முடக்கப்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனமும் சர்வதேச மற்றும் தேசிய வைரஸ் தொடர்பான வைத்தியர்கள் கோரியுள்ளனர்.

கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டவுடன் நாட்டை முடக்கிய நியூஸிலாந்து, முழு உலகத்துக்கும் எடுத்துக்காட்டாக உள்ளதென குறித்த கட்சிகளின் தலைவர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.

அமைச்சர்களின் பரஸ்பர அறிவிப்புகள், பரஸ்பர வர்த்தமானி மற்றும் ஊடக அறிக்கைகளை நிறுத்தி தொற்றை கட்டுப்படுத்தக்கூடிய வேலைத்திட்டத்துக்கு செல்லுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்தைக் கோரியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்