வசந்த முதலிகேவின் விளக்கமறியல் நீடிப்பு

வசந்த முதலிகே உள்ளிட்ட நால்வருக்கு 31 ஆம் திகதி வரை விளக்கமறியல்

by Bella Dalima 17-08-2021 | 5:40 PM
Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 04 சந்தேகநபர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடுவளை நீதவான் மஞ்சுள ரத்னாயக்கவின் முன்னிலையில் காணொளி தொழில்நுட்பத்தினூடாக சந்தேகநபர்களை இன்று ஆஜர்படுத்திய போது, விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்ட போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை காயப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.