by Bella Dalima 17-08-2021 | 4:22 PM
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகருமான ஆனந்த கண்ணன் (48) புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.
சிங்கப்பூரை சேர்ந்த தமிழரான இவர் பிரபல தொலைக்காட்சி அலைவரிசைகளில் தொகுப்பாளராக பிரபலம் பெற்றவர்.
தொலைக்காட்சி மட்டுமல்லாமல், சிந்துபாத் தொடரிலும் சரோஜா, அதிசய உலகம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
அரிதான Bile Duct Cancer என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று (16) இரவு காலமானார்.
சிங்கப்பூரில் வசித்து வந்தவர் தனது மனைவி ராணியின் படிப்பிற்காக சென்னை வந்திருக்கிறார். அதன் பின்பே நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்ற ஆரம்பித்திருக்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இவரது கலகலப்பான பேச்சுக்கும் சிரித்த முகத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.