by Staff Writer 17-08-2021 | 10:32 PM
Colombo (News 1st) திஸ்ஸமஹாராம - சூரியவெவ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு சந்தேகநபர்கள் உயிரிழந்துள்ளனர்.
பெண்ணொருவரின் கழுத்திலிருந்து சங்கிலியை அபகரிக்க முயன்ற இருவர் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, பொலிஸாரால் நடத்தப்பட்ட பதில் துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு சந்தேகநபர்கள் உயிரிழந்துள்ளனர்.
பல குற்றச்செயல்கள் தொடர்பில் இதற்கு முன்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரே உயிழந்துள்ளனர்.
சம்பவத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூன்று பேர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.