கிரிபத்கொடை வர்த்தகக் கட்டிடத்தில் தீ பரவல்

கிரிபத்கொடை வர்த்தகக் கட்டிடத்தில் தீ பரவல்

எழுத்தாளர் Staff Writer

17 Aug, 2021 | 12:53 pm

Colombo (News 1st) கிரிபத்கொடை – மாகொல வீதியில் மூன்று மாடி வர்த்தகக் கட்டிடம் ஒன்றில் இன்று காலை தீ பரவியது.

இதன்போது, சிறார்கள் உள்ளிட்ட 12 பேர் கட்டிடத்திற்குள் சிக்கியிருந்ததாக பொலிஸார் கூறினர்.

அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

தீ பரவிய போது ஏற்பட்ட புகையினால் பாதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கட்டடத்தின் முதலாது மாடியிலிருந்த தனியார் லீசிங் நிறுவனமொன்றே அதிகளவில் தீக்கிரையாகியுள்ளது.

கட்டிடத்தில் பரவிய தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், 6 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் கூறினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]rst.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்