ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் சரீர பிணையில் விடுதலை

ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் சரீர பிணையில் விடுதலை

by Staff Writer 16-08-2021 | 11:27 AM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரரான (மைத்துனர்) மொஹமட் சியாப்தீனை 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதவான் புத்திக ஶ்ரீ ராகல இன்று உத்தரவிட்டார். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமி ஒருவரை 2016 ஆம் ஆண்டு இரண்டு தடவைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் சாட்சியாளர்களுக்கு அல்லது விசாரணைகளுக்கு ஏதேனும் இடையூறுகளை விளைவித்தால், பிணை உத்தரவை இரத்து செய்து , வழக்கு விசாரணை நிறைவு செய்யும் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என சந்தேகநபருக்கு நீதவான் எச்சரித்துள்ளார். சந்தேகநபரின் கடவுச் சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதவான், வௌிநாட்டு பயணத் தடையையும் விதித்துள்ளார். துஷ்பிரயோக சம்பவம் சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போதிலும், அதனை உறுதி செய்வதற்கு தேவையான சட்ட மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்கவும் சம்பவம் இடம்பெற்ற திகதியை உறுதியாகக் கூறுவதற்கு விசாரணை அதிகாரிகளால் முடியால் போயுள்ளதாகவும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பிரதம நீதவான் சந்தேகநபருக்கு பிணை வழங்க உத்தரவிட்டுள்ளார்.