திருமண பதிவுகளுக்கு மாத்திரம் அனுமதி

திருமண பதிவுகளுக்கு மாத்திரம் அனுமதி

by Staff Writer 16-08-2021 | 11:52 AM
Colombo (News 1st) திருமண பதிவுகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுமெனவும் திருமண நிகழ்வுகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். திருமண பதிவுகளை மாத்திரம் வீடுகளில் நடத்த முடியும் என அவர் கூறினார். மணமகள், மணமகன், அவர்களின் குடும்பத்தினர், பதிவாளர் மற்றும் இரண்டு சாட்சியாளர்கள் மாத்திரமே திருமண பதிவின் போது கலந்துகொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். இவர்களை தவிர்ந்த ஏனைய எவரும் திருமண பதிவில் கலந்துகொள்ள முடியாது எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.