by Staff Writer 16-08-2021 | 5:51 PM
Colombo (News 1st) ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் இருந்த இலங்கையர்களில் 08 பேர் பிரித்தானியா மற்றும் கட்டாருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மூன்று இலங்கையர்கள் பிரித்தானியாவிற்கும் ஐந்து பேர் கட்டாருக்கும் அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல், பேராசிரியர் ஜயனாத் கொழம்பகே தெரிவித்தார்.
மேலும் 60-க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் காபுல் நகரில் தங்கியுள்ளதாகவும், அவர்களையும் அங்கிருந்து அழைத்துச் செல்லுமாறு சில நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா, பிரித்தானியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக பேராசிரியர் ஜயனாத் கொழம்பகே கூறினார்.
காபுல் நகரிலுள்ள இலங்கையர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வௌியேற்றிக்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் செயலாளர் கூறினார்.