ஹெய்டி நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,297 ஆக அதிகரிப்பு

ஹெய்டி நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,297 ஆக அதிகரிப்பு

ஹெய்டி நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,297 ஆக அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

16 Aug, 2021 | 6:33 pm

Colombo (News 1st) ஹெய்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,297 ஆக அதிகரித்துள்ளதுடன், 5,700 பேர் காயமடைந்துள்ளனர்.

கரீபியன் தீவு நாடான ஹெய்டியின் டிபுரோன் தீபகற்ப பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து வீழ்ந்தன. இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.

முதலில், இடிபாடுகளிலிருந்து 304 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 420 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 724-ஆக அதிகரித்தது.

இதையடுத்து, மேலும் 573 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,297 ஆக அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்