மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2021 | 4:42 pm

Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை வருமான வரி பத்திரம் விநியோகிக்கப்படாது என மேல் மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஆகஸ்ட் 12 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் வருமான வரி பத்திரங்களுக்கு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை அபராதம் அறவிடப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி பத்திரங்களை ஒன்லைன் ஊடாக பெற்றுக்கொள்வதாயின், www.motortraffic.wp.gov.lk என்ற இணையத்திற்குள் பிரவேசித்து, அவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்