ஏப்ரல் 21 தாக்குதல்: மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்ய சிவப்பு பிடியாணை

ஏப்ரல் 21 தாக்குதல்: மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்ய சிவப்பு பிடியாணை

ஏப்ரல் 21 தாக்குதல்: மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்ய சிவப்பு பிடியாணை

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2021 | 2:53 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்வதற்கான சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

தாக்குதலுடன் தொடர்புடைய எவரையும் சட்டத்திடமிருந்து தப்புவதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய 21 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்