அமைச்சரவையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது

அமைச்சரவையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

16 Aug, 2021 | 12:27 pm

News 1st (Colombo) அமைச்சரவையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிணங்க, பேராசிரியர் G.L.பீரிஸ் வௌிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வௌிவிவகார அமைச்சராக பதவி வகித்த தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பவித்ரா வன்னியாராச்சி போக்குவரத்து அமைச்சராகவும் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மின்சக்தி அமைச்சு – காமினி லொக்குகேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ஊடகத்துறை அமைச்சராக டலஸ் அழகப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறைக்கு மேலதிகமாக, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு அமைச்சராக நாமல் ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்