5000-இற்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் வீடுகளில் சிகிச்சை

5000-இற்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் வீடுகளில் சிகிச்சை

5000-இற்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் வீடுகளில் சிகிச்சை

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2021 | 6:29 pm

Colombo (News 1st) 5000-இற்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் வீடுகளிலேயே சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மாவட்டங்களிலும் வீடுகளில் சிகிச்சை வழங்கும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 16,000 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஏதேனும் அறிகுறிகள் அல்லது உடல் பலவீனமடைந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

1999 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாகவும் 011 7 966 366 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவும் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்