12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு COVID தடுப்பூசி ஏற்ற திட்டம்

12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு COVID தடுப்பூசி ஏற்ற திட்டம்

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2021 | 5:51 pm

Colombo (News 1st) 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கட்டம் கட்டமாக COVID தடுப்பூசி ஏற்றுவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் திட்டமிடுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்ட தென் மாகாணத்திற்கான COVID -19 சிறுவர் சிகிச்சை பிரிவை திறந்து வைத்த போதே பிரதமர் இந்த விடயத்தைக் கூறினார்.

காணொளி தொழில்நுட்பத்தினூடாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.

சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் செயற்பாட்டின் போது, பல்வேறுப்பட்ட நோய்களுக்குள்ளாகியுள்ள சிறுவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்