by Staff Writer 15-08-2021 | 8:38 PM
Colombo (News 1st) COVID தடுப்பூசியேற்றும் செயற்பாடு நாடளாவிய ரீதியில் 17 மாவட்டங்களில் 126 மத்திய நிலையங்களில் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இதுவரையில் சுமார் 115 இலட்சம் பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக ஔடத உற்பத்தி, விநியோக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
18 முதல் 30 வயதிற்குட்பட்ட ஒரு தொகையினரும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இராணுவத்தின் தலைமையில் கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில், அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
இதனிடையே, நாட்டின் மேலும் சில பகுதிகளிலும் தடுப்பூசியேற்றும் செயற்பாடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.