ஹெய்ட்டியில் நிலநடுக்கம்: 304 பேர் பலி, 1800 பேர் காயம் 

ஹெய்ட்டியில் நிலநடுக்கம்: 304 பேர் பலி, 1800 பேர் காயம் 

ஹெய்ட்டியில் நிலநடுக்கம்: 304 பேர் பலி, 1800 பேர் காயம் 

எழுத்தாளர் Bella Dalima

15 Aug, 2021 | 11:14 am

Colombo (News 1st) ஹெய்ட்டியில் நேற்று (14) ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 304 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1800-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

அந்நாட்டு நேரப்படி நேற்றுக்காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.2 மெக்னிடியூட்டாக பதிவாகியிருந்தது.

ஹோட்டல்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

ஏராளமான வீடுகளும் நிர்மூலமாகியுள்ளன.

நிலநடுக்கத்தினால் பாரியளவிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் Ariel Henry  ஒரு மாதத்திற்கு அவசரகால நிலையினை பிரகடனம் செய்துள்ளார்.

மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக அணியொன்றை தயார் செய்துள்ளதாக ஹெய்ட்டி பிரதமர் Ariel Henry தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்