பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டெழ ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்: C.V. விக்னேஸ்வரன்

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டெழ ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்: C.V. விக்னேஸ்வரன்

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டெழ ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்: C.V. விக்னேஸ்வரன்

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2021 | 7:15 pm

Colombo (News 1st) இலங்கையிலுள்ள அனைவரும் கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கியுள்ளதை உணர்ந்து செயற்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் C.V. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சுனாமியின் போது போரில் ஈடுபட்டிருந்த அரச படைகளும் விடுதலைப் புலிகளும் சில நாட்கள் தமது பகைமையை மறந்து ஒன்று சேர்ந்து மக்களுக்கு உதவி புரிந்ததை இந்த தருணத்தில் நினைவுபடுத்த விரும்புவதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் வேறுபாடுகள் தாண்டி கொரோனாவிலிருந்து நாட்டை எவ்வாறு மீட்கலாமென அனைவரும் சிந்திக்க வேண்டும் என அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் காழ்புணர்வுகளைத் தாண்டி கொரோனா எனும் பேரிடரிலிருந்து நாட்டையும், உயிர்களையும் பாதுகாத்து வீழ்ந்து போகும் பொருளாதார நிலையிலிருந்து மீண்டெழுவதற்கு ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் C.V. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்