திருமண வைபவங்கள், சமூக ஒன்றுகூடல்களுக்கு மறு அறிவித்தல் வரை தடை

திருமண வைபவங்கள், சமூக ஒன்றுகூடல்களுக்கு மறு அறிவித்தல் வரை தடை

எழுத்தாளர் Bella Dalima

15 Aug, 2021 | 3:44 pm

Colombo (News 1st) இன்று (15) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை வைபவங்கள் மற்றும் சமூக ஒன்றுகூடல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக COVID தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

அத்தோடு, 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவிற்கு பின்னர் மறு அறிவித்தல் வரை வீடுகளில் அல்லது மண்டபங்களில் திருமண வைபவங்களை நடத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

உணவகங்களின் கொள்ளளவில் 50 வீதத்திற்கு உட்பட்டவர்களே இருக்க முடியும் எனவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்