கேரளாவில் ஆயுதங்கள் கைப்பற்றல்: சென்னையில் இலங்கையர் கைது

கேரளாவில் ஆயுதங்கள் கைப்பற்றல்: சென்னையில் இலங்கையர் கைது

கேரளாவில் ஆயுதங்கள் கைப்பற்றல்: சென்னையில் இலங்கையர் கைது

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2021 | 7:52 pm

Colombo (News 1st) கேரளாவில் ஹெரோயின் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு இலங்கையர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் 300 கோடி இந்திய ரூபா மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருள், A.K.47 துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் கடந்த மார்ச் மாதம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு முகாமை பிரிவு அதிகாரிகள், சென்னை – வளசரவாக்கம், முரளி கிருஷ்ணா நகரில் இலங்கையர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

அவரது வீட்டில் அதிகாரிகள் நேற்று (14) நடத்திய சோதனையில் விடுதலைப்புலிகள் தொடர்பான புத்தகங்கள், கையடக்க தொலைபேசி மற்றும் சிம் கார்ட்கள் கைப்பற்றப்பட்டதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்