எதிர்வரும் 4 வாரங்களுக்கு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்: சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

எதிர்வரும் 4 வாரங்களுக்கு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்: சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2021 | 11:26 am

Colombo (News 1st) எதிர்வரும் 04 வாரங்களுக்கு பொதுமக்கள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என COVID கட்டுப்பாட்டிற்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்து, அநாவசியமாக வீடுகளிலிருந்து வௌியேற வேண்டாம் என அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

COVID தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் உடனடியாக தங்களுக்கான தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அறிவுறுத்தினார்.

தற்போது COVID நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, அதிக மரணங்களும் பதிவாவதாக அவர் கூறினார்.

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களில் அதிகளவானோர் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளாதவர்கள் எனவும் தற்போது பரவிவரும் டெல்டா பிற்ழ்வானது தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கும் தொற்றுவதற்கான வாய்புகள் காணப்பட்டாலும், உயிரிழப்புகள் ஏற்படாது எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டார்.

இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டிருந்தாலும், எதிர்வரும் நான்கு வாரங்களுக்கு மிகுந்த அவதானத்துடன் அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்