.webp)
Colombo (News 1st)
ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் காபூலுக்குள் அவர்கள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் தலிபான்கள் நுழைந்துள்ளதாக AFP நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான நகரங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், ஆப்கானிஸ்தான் முழுவதையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதில் இறுதிக்கட்டத்தை அவர்கள் எட்டியுள்ளனர். ஆப்கான் படைகளின் கோட்டையாக கருதப்படும் மசார்-இ-ஷெரீப்பை கைப்பற்றியதை தொடர்ந்து, கிழக்கு பகுதியின் முக்கிய நகரமான ஜலாலாபாத் முழுவதையும் தலிபான்கள் இன்று (15) தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்தனர். கடந்த 10 நாட்களில், அரச படைகள் பெரும் பின்னடைவை சந்தித்தனர். இந்நிலையில், காபூலுக்குள் தலிபான்கள் நுழைந்தது குறித்து அதிபர் அஷ்ரப் கனியின் (Ashraf Ghani) தலைமை அலுவலர் மாடின் பெக், "அச்சப்பட வேண்டாம். காபூல் பாதுகாப்பாக உள்ளது" என தெரிவித்துள்ளார். தலிபான்கள் காபூலை சுற்றி வளைத்துள்ள நிலையில், அரச படைகள் சரணடையுமா அல்லது கடும் போரை மேற்கொள்ளுமா என கேள்வி எழுந்துள்ளது.