50 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் வல்வெட்டித்துறையில் மூவர் கைது

by Staff Writer 14-08-2021 | 11:50 AM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் போதைப்பொருட்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 120 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் 2 கிலோவிற்கும் அதிக நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் என்பன சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் 50 மில்லியன் ரூபா பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது. கடற்படையினருடன் இணைந்து வல்வெட்டித்துறை கடற்கரையில் இன்று அதிகாலை முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் போதைப்பொருளை கொண்டு செல்ல பயன்படுத்திய கெப் வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 32 மற்றும் 38 வயதுகளையுடைய கிளிநொச்சி - மாங்குளத்தை சேர்ந்த மூன்று பேரே வல்வெட்டித்துறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்