2000 ரூபாவிற்கு Sinopharm தடுப்பூசி விற்பனை: லுனாவ வைத்தியசாலை சிற்றூழியர் கைது

2000 ரூபாவிற்கு Sinopharm தடுப்பூசி விற்பனை: லுனாவ வைத்தியசாலை சிற்றூழியர் கைது

2000 ரூபாவிற்கு Sinopharm தடுப்பூசி விற்பனை: லுனாவ வைத்தியசாலை சிற்றூழியர் கைது

எழுத்தாளர் Bella Dalima

14 Aug, 2021 | 11:39 am

Colombo (News 1st) Sinopharm தடுப்பூசியை 2000 ரூபாவிற்கு விற்பனை செய்த லுனாவ வைத்தியசாலையின் சிற்றூழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் விசாரணை பிரிவினரும் கல்கிசை பிராந்திய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

50 வயதான சிற்றூழியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சிற்றூழியர் மொரட்டுவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை மொரட்டுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்