வரி விதிப்பு வர்த்தமானி குறித்து நிதி அமைச்சு தௌிவூட்டல்

வரி விதிப்பு வர்த்தமானி குறித்து நிதி அமைச்சு தௌிவூட்டல்

எழுத்தாளர் Staff Writer

14 Aug, 2021 | 4:55 pm

Colombo (News 1st) கருவாடு, நெத்தலி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான வரி தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி குறித்து நிதி அமைச்சு தௌிவுபடுத்தியுள்ளது.

வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய, புதிதாக வரி விதிக்கப்படவில்லை எனவும், இறக்குமதி செய்யப்படும் நெத்தலி மற்றும் கருவாடு கிலோ ஒன்றுக்கு 100 ரூபா வர்த்தக வரி கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் 6 மாதங்களுக்கு அமுலாகும் வகையில் விதிக்கப்பட்டிருந்ததாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த காலப்பகுதி நிறைவடைந்தமையால், எவ்வித திருத்தங்களுமின்றி அந்த வரி அறிவிப்பை நீடித்து வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் வகையில் வெண்ணெய், வெந்தயம், குரக்கன் மா, கடுகு, வெங்காயம் ஆகியவற்றுக்கான இறக்குமதி தொடர்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானிக்கான ஒருவருட கால எல்லை நிறைவடைகின்றமையால், அதனையும் நீடித்து நேற்று வர்த்தமானி வௌியிடப்பட்டதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்