களனிதிஸ்ஸ சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

களனிதிஸ்ஸ சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

களனிதிஸ்ஸ சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

எழுத்தாளர் Staff Writer

14 Aug, 2021 | 11:24 am

Colombo (News 1st) களனிதிஸ்ஸ சுற்றுவட்டத்திலிருந்து ஒருகொடவத்தை சந்தி வரை, கொழும்பு நோக்கி பயணிக்கும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 05 மணி தொடக்கம் 48 மணித்தியாலத்திற்கு வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

Carpet இடப்படுவதால் வீதி மூடப்பட்டுள்ளது.

எனினும், கொழும்பிலிருந்து வௌியேறும் பகுதி, ஒருகொடவத்தை சந்தி தொடக்கம் களனிதிஸ்ஸ சுற்றுவட்டம் வரை திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்த காலப்பகுதியில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, களனி பாலம், களனிதிஸ்ஸ சுற்றுவட்டம் ஊடாக இங்குருகடே சந்திக்கு சென்று ஆமர் பாபர் சந்தி, மகா வித்தியாலய வீதி ஊடாக கொழும்பு புறக்கோட்டைக்கு செல்ல முடியும்.

ஆமர் வீதி, பஞ்சிகாவத்தை, மருதானை ஊடாக புறக்கோட்டைக்கும், பொரளைக்கும் செல்ல முடியும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்