கருவாடு, கடுகு, வெந்தயம், உப்பிற்கு விசேட பொருட்களுக்கான வர்த்தக வரி

கருவாடு, கடுகு, வெந்தயம், உப்பிற்கு விசேட பொருட்களுக்கான வர்த்தக வரி

கருவாடு, கடுகு, வெந்தயம், உப்பிற்கு விசேட பொருட்களுக்கான வர்த்தக வரி

எழுத்தாளர் Staff Writer

14 Aug, 2021 | 11:00 am

Colombo (News 1st) ஒரு கிலோகிராம் கருவாடு மற்றும் நெத்திலி மீது 100 ரூபா விசேட பொருட்களுக்கான வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ளது

இந்த வரி திருத்தத்தை மேற்கொள்ளும் வகையில், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ விடுத்துள்ள வர்த்தமானியில் மேலும் சில பொருட்கள் மீதும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

Butter உற்பத்திகள் மீதும் 880 ரூபா விசேட வர்த்தக வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் வெந்தயம் மீது 50 ரூபா வரியும், ஒரு கிலோகிராம் குரக்கன் மா மீது 150 ரூபா வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் கடுகு மீது 62 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் உப்பு மீதும் 40 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படுகின்ற வெங்காயத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள 40 ரூபா வரியில் 10 ரூபாவை மாத்திரம் அறவிட்டு எஞ்சிய தொகையை வணிக நோக்கம் இல்லாமல் ஔடதங்களை உற்பத்தி செய்யும் ஔடத உற்பத்தி நிறுவனமொன்றுக்கு விடுவிக்கவுள்ளதாகவும் வரத்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்