ஒரு பில்லியன் டொலரை ஈட்டும் இலக்கை நோக்கி பயணிப்பதாக அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு

ஒரு பில்லியன் டொலரை ஈட்டும் இலக்கை நோக்கி பயணிப்பதாக அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Aug, 2021 | 10:14 pm

Colombo (News 1st) நாட்டின் பொருளாதாரத்திற்காக ஒரு பில்லியன் டொலரை ஈட்டிக்கொள்ளும் இலக்கை நோக்கி பயணிப்பதாக, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார்.

CNBC தொலைக்காட்சியுடனான நேர்காணலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சர்வதேச நிதியத்திடமிருந்து விசேட உதவியாக 800 மில்லியன் டொலர் எமக்கு கிடைக்கவுள்ளது. நாம் புதிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம். பயிற்சியுடன் கூடிய பயன்பாட்டு வளம் தொடர்பில் நாம் கவனம் செலுத்தினோம். குறிப்பிடத்தக்களவு வளம் உள்ளது. அதனூடாக, 400 மில்லியன் டொலரை ஈட்டுவதற்கு எதிர்பார்க்கிறோம். அனைத்தும் சரியாக இடம்பெற்றால், ஒரு பில்லியனை ஈட்ட முடியும்.

//உபயோகப்படுத்தப்படாத சொத்துக்களைப் பயன்படுத்துவது நாட்டின் கடன் நெருக்கடிக்கு உதவ குறைந்தபட்சம் $ 400 மில்லியன் சம்பாதிக்க முடியும்.//


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்