by Staff Writer 13-08-2021 | 6:15 PM
Colombo (News 1st) நாட்டில் 87 வீதமான ஆசிரியர்களுக்கு முதலாவது Sinopharm தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசியை இம்மாத நிறைவிற்குள் ஏற்ற எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் தெரிவித்தார்.
பாடசாலை கல்வி நடவடிக்கையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாவது வாரத்தில் ஆரம்பிக்க இதற்கு முன்னர் தீர்மானித்திருந்த போதிலும், தற்போதைய சூழ்நிலையில் உறுதியான திகதியை அறிவிக்க முடியாதுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.