உத்தர பிரதேசத்தில் 605 கிராமங்கள் நீரில் மூழ்கின

உத்தர பிரதேசத்தில் 605 கிராமங்கள் நீரில் மூழ்கின

by Bella Dalima 13-08-2021 | 5:51 PM
Colombo (News 1st) உத்தர பிரதேசத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக 24 மாவட்டங்களில் சுமார் 605 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டுள்ளார். மழையினால் அங்கு 110 கிராமங்களுக்கான தொடர்புகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதுன், பிரயக்ராஜ், மிர்சாபுர், வாரணாசி, காசிபுர் மற்றும் பல்லியா ஆகிய மாவட்டங்களில் கங்கையின் நீர் மட்டம் அபாய நிலையை எட்டியுள்ளதாக நிவாரண ஆணையாளர் ரன்வீர் பிரசாத் தெரிவித்துள்ளார். அவுரயா, ஜலாவுன், ஹமிர்புர், பண்டா ஆகிய மாவட்டங்களில் யமுனையின் நீர் மட்டம் அபாய நிலையை அடைந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.