ஹிஷாலினியின் பூதவுடல் டயகமவில் மீண்டும் அடக்கம்

ஹிஷாலினியின் பூதவுடல் டயகமவில் மீண்டும் அடக்கம்

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2021 | 9:58 pm

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் எரிகாயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் உடல் இரண்டாவது பிரேத பரிசோதனையை அடுத்து மீண்டும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்றிரவு பூதவுடல் டயகமவில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

பேராதனை வைத்தியசாலையில் இரண்டாவது தடவையாக சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இன்று சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் பூதவுடலை அடையாளம் காண்பிப்பதற்காக பேராதனை வைத்தியசாலைக்கு இன்று சென்றிருந்தனர்.

பின்னர் மீண்டும் அடக்கம் செய்வதற்காக சிறுமி ஹிஷாலினியின் உடல் கண்டியில் இருந்து டயகமவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஹிஷாலினியின் உடல் ஜுலை 30 ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்