நாட்டை முழுமையாக மூடும் திட்டம் அரசாங்கத்திற்கு இல்லை: சன்ன ஜயசுமன

நாட்டை முழுமையாக மூடும் திட்டம் அரசாங்கத்திற்கு இல்லை: சன்ன ஜயசுமன

நாட்டை முழுமையாக மூடும் திட்டம் அரசாங்கத்திற்கு இல்லை: சன்ன ஜயசுமன

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2021 | 3:41 pm

Colombo (News 1st) நாட்டை முழுமையாக மூடும் திட்டம் அரசாங்கத்திற்கு இல்லை என இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இன்று (13) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், பயணக்கட்டுப்பாடுகளில் ஓரளவு இறுக்கமான முறையை அமுல்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

நாளாந்தம் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள், தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் சுகாதார துறையினரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இன்றைய கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் இன்று மாலை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுப்பார் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்