ஒக்சிஜன் இறக்குமதி செய்ய தீர்மானம்

கொரோனா நோயாளர்களுக்கான ஒக்சிஜனை இறக்குமதி செய்ய தீர்மானம்

by Staff Writer 13-08-2021 | 11:58 AM
Colombo (News 1st) கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால், அவர்களுக்கு தேவையான ஒக்சிஜனை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. மலேசியா மற்றும் இந்தியாவிலிருந்து ஒக்சிஜன் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் முதலாவது கட்டமாக 20 மெட்ரிக் தொன் ஒக்சிஜன் அடங்கிய 6 கொள்கலன்களை நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இரண்டு உள்நாட்டு உற்பத்தியாளர்கள் நாட்டிற்கான ஒக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்