களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 15,000 மெட்ரிக் தொன் சீனி கொள்வனவு செய்யப்படவுள்ளது

களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 15,000 மெட்ரிக் தொன் சீனி கொள்வனவு செய்யப்படவுள்ளது

களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 15,000 மெட்ரிக் தொன் சீனி கொள்வனவு செய்யப்படவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2021 | 12:13 pm

களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 15,000 மெட்ரிக் தொன் சீனி கொள்வனவு செய்யப்படவுள்ளது

கொழும்பு துறைமுகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 15,000 மெட்ரிக் தொன் சீனியை விற்பனை செய்வதற்காக கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்யவுள்ளது.

சீனியை இன்று (13) கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

நாட்டிற்கான சீனி இறக்குமதி தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சீனி இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கு முன்னர், தற்போது துறைமுகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள சீனி கப்பலுக்கு ஏற்றப்பட்டிருந்ததாகவும் வர்த்தக அமைச்சர் கூறினார்.

இந்த சீனிக்கான பணத்தை இறக்குமதியாளர்களுக்கு செலுத்தி, அதனை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொள்வனவு செய்யப்படும் சீனியில், சதொச ஊடாக ஒரு கிலோ வௌ்ளை சீனியை 101 ரூபாவிற்கும் 01 கிலோ சிவப்பு சீனியை 115 ரூபாவிற்கும் விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாக சதொச நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ரியல் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்