Rapid PCR பரிசோதனை இயந்திர கொள்வனவை சுகாதார அமைச்சு தாமதிக்கின்றதா?

by Staff Writer 12-08-2021 | 8:41 AM
Colombo (News 1st) சாதாரணமான PCR பரிசோதனைகளின் போது மாதிரி பெறப்பட்டு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களின் பின்னரே அதன் பெறுபேறு கிடைக்கும். எனினும், Rapid PCR பரிசோதனையில் ஒரு மணித்தியாலயத்திற்குள் முடிவை கண்டறிய முடியும். இதன் காரணமாக சில விமான நிறுவனங்கள் பயணிகளிடம் Rapid PCR பரிசோதனை அறிக்கைகளை கோருகின்றன. இதனால் சுகாதார அமைச்சு விரைவாக Rapid PCR பரிசோதனை இயந்திரங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என வைத்திய ஆய்வுக்கூட பரிசோதகர்கள் சங்கம் கோருகின்றது. எனினும், கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் நிறைவுபெற்ற விலைமனுகோரல் செயற்பாட்டை இன்னும் தாமதப்படுத்தி இந்த இயந்திரங்களை கொள்வனவு செய்வதை சுகாதார அமைச்சு தாமதப்படுத்துவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தமக்கு நெருங்கிய ஒரு தரப்பு இலாபகரமான விதத்தில் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்வதற்காக இவ்வாறு தாமதப்படுத்தப்பட்டுள்ளதா என விசாரணை நடத்துமாறு வைத்திய ஆய்வுக்கூட பரிசோதகர்கள் சங்கம், ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.