வரலாற்றில் அதிகூடிய வெப்பநிலை இத்தாலியில் பதிவு

வரலாற்றில் அதிகூடிய வெப்பநிலை இத்தாலியில் பதிவு

by Staff Writer 12-08-2021 | 4:59 PM
Colombo (News 1st) இத்தாலியின் Sicily பிராந்தியத்தில் அதிகூடிய வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் 48.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. 1977 ஆம் ஆண்டு கிரேக்கத்தின் ஏதென்ஸில் 48.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐரோப்பா கண்டத்தில் இதுவரை இல்லாத அளவில் வரலாற்றில் அதிகூடிய வெப்பநிலையாக இது பதிவாகியுள்ளது. தலைநகர் ரோம் உள்ளிட்ட நகரங்களில் வெப்பத்துடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. பல பிராந்தியங்களில் கடுமையான வெப்பத்திற்கான "சிவப்பு" எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.