ரஷ்ய ஹெலிகொப்டர் குளத்திற்குள் வீழ்ந்து விபத்து

ரஷ்ய சுற்றுலா ஹெலிகொப்டர் குளத்திற்குள் வீழ்ந்து விபத்து 

by Staff Writer 12-08-2021 | 7:12 PM
Colombo (News 1st) ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் 16 பேருடன் பயணித்த சுற்றுலா ஹெலிகொப்டர் ஒன்று குளத்திற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்திற்குள்ளான ஹெலிகொப்டரில் ஒரு குழந்தை உட்பட 13 சுற்றுலாப் பயணிகளும் ஊழியர்கள் மூவரும் பயணித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த ஹெலிகொப்டரானது 137 மீட்டர் ஆழத்தில் வீழ்ந்துள்ளதாகவும் ஆழ்கடல் நீச்சல்காரர்கள் தேடுதலில் ஈடுபடுவதற்கு இந்த ஆழம் அதிகம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொஸ்கோவிலிருந்து சென் பீற்றர்ஸ்பர்க் நோக்கி பயணித்த குறித்த விமானம் Kamchatka பிராந்தியத்தில் குரில் எனும் குளத்திற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.