வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

மேல் மாகாண வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

by Staff Writer 12-08-2021 | 2:35 PM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரம் இன்று (12) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.