by Staff Writer 12-08-2021 | 2:58 PM
Colombo (News 1st) சாரதி அனுமதிப்பத்திர காலாவதி திகதி இந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சில் இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர மற்றும் நாரஹேன்பிட்டி அலுவலகங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் 07 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக திலும் அமுனுகம மேலும் குறிப்பிட்டுள்ளார்.