மேல் மாகாண 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி

மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் 3 நாள் செயற்றிட்டம் இன்று (11) ஆரம்பம்

by Staff Writer 11-08-2021 | 8:50 AM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் இன்று (11) ஆரம்பிக்கப்படுகின்றது. அதற்கமைய, குறித்த செயற்றிட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது. மேல் மாகாணத்தில் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கும் மேற்பட்டோரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படும் நாள், இடம் மற்றும் நேரம் ஆகியன கையடக்கத்தொலைபேசிக்கு குறுந்தகவல் (SMS) ஊடாக அறிவிக்கப்படவுள்ளது. இதனடிப்படையில், கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கம்பஹா - பொது வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளைய தினம் (12) மாத்திரம், களுத்துறை பொது வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத மேல் மாகாணத்தில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோர் 1906 எனும் துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முற்பதிவு செய்து கொள்ள முடியும் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்