வவுனியா – ஆச்சிபுரத்தில் 19 வயது யுவதி சடலமாக மீட்பு 

வவுனியா – ஆச்சிபுரத்தில் 19 வயது யுவதி சடலமாக மீட்பு 

வவுனியா – ஆச்சிபுரத்தில் 19 வயது யுவதி சடலமாக மீட்பு 

எழுத்தாளர் Staff Writer

11 Aug, 2021 | 6:41 pm

Colombo (News 1st) வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து 19 வயது யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி இன்று (11) காலை முதல் காணாமற்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலின் போதே, கிணற்றிலிருந்து யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது பெற்றோர் தெரிவித்ததாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]st.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்